கோயம்புத்தூர்

ஈஷா யோக மையத்தில் சுதந்திர தின விழா

16th Aug 2019 07:36 AM

ADVERTISEMENT

கோவை ஈஷா யோக மையத்தில் 73-ஆவது சுதந்திர தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
 இதில், வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர் கிட்டுசாமி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். நிறுவனத்தின் தலைவர் குமார், மற்றொரு இயக்குநர் கனகராஜ், இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் வேலுமணி, முன்னாள் துணைத் தலைவர் வெள்ளியங்கிரி, முன்னாள் கவுன்சிலர்கள் பொன்னுசாமி, பழனிசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், ஈஷா தன்னார்வலர்கள், சம்ஸ்கிருதி மாணவர்கள், சுற்றுவட்டார கிராம மக்கள், பழங்குடியினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
 இதில், ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவின் சுதந்திர தின செய்தி வாசிக்கப்பட்டது. முன்னதாக அவர் வெளியிட்டிருந்த வாழ்த்துச் செய்தியில், "நாடு சுதந்திரம் பெற்ற இந்த 72 ஆண்டுகளில், பொருளாதாரம், வியாபாரம், அறிவியல், தொழில்நுட்பம், தேசத்தின் இறையாண்மையை நிறுவுதல் என பல மகத்தான முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது. ஆனால், முன்னேற்றத்திற்கான நமது பசியில், நமது மக்கள்தொகைக்கு ஏற்றவாறு சாத்தியக்கூறுகளை நிறைவேற்றுவது என்பது சற்றே சவாலானதுதான். தண்ணீர் பஞ்சமில்லா சுதந்திர பாரதத்தை நாம் உருவாக்க வேண்டும். இதுவே நமது உறுதிமொழியாக இருக்கவேண்டும். இங்கு வாழப்போகும் அடுத்தடுத்த தலைமுறைகள் நலமாய் வாழ்வதை நாம் உறுதிசெய்து கொள்ள வேண்டும். 
 வருங்கால சந்ததியினருக்கு நிறைவான தண்ணீரும் வளமான மண்ணும் விட்டுச்செல்லாவிட்டால், நம் அரசியல் சுதந்திரம் வீணாகி விடும் என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT