கோயம்புத்தூர்

பக்ரீத் பண்டிகை: அன்னூர் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை  

11th Aug 2019 08:26 AM

ADVERTISEMENT

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அன்னூர் ஆட்டுச் சந்தையில் சனிக்கிழமை ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
 கோவை மாவட்டம், அன்னூர் சுற்று வட்டாரத்தில் அதிக அளவில் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றை விற்பனை செய்வதற்காக அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் பிரதான ஆட்டுச் சந்தை வாரந்தோறும் சனிக்கிழமையில் நடைபெறுகிறது.
 பக்ரீத் பண்டிகை வரும் திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, அன்னூரில் சனிக்கிழமை அதிகாலையிலேயே ஆட்டுச் சந்தை துவங்கியது. இதில் அன்னூர், புளியம்பட்டி மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதனால் அன்னூர் ஆட்டு சந்தையில் ஆடுகளை வாங்கவும் விற்பனை செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் குவிந்தனர்.
 ஒரு ஆட்டின் விலை குறைந்தபட்சமாக ரூ. 5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை விற்பனையானது. இந்தச் சந்தையில் கோவை,திருப்பூர், நீலகிரி மற்றும் கேரளம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்திருந்தவர்கள் பக்ரீத் பண்டிகைக்காக அதிக அளவில் ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
 இதனால் சனிக்கிழமை ஒரே நாளில் ரூ. 1 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாயின. எப்போதும் இல்லாத அளவில் இந்த முறை அதிக ஆடுகள் கொண்டு வரப்பட்டதால் இடம் பற்றாக்குறை காரணமாக சாலை ஓரங்களில் ஆடுகள் நிறுத்தி வியாபாரம் செய்தனர். எதிர்பார்த்த அளவை விட ஆட்டுச் சந்தையில் அதிக லாபம் கிடைத்தாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT