கோயம்புத்தூர்

உக்கடம் பெரிய குளத்தின் கரையை உடைக்க முயற்சி: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பால் நிறுத்தம்

11th Aug 2019 08:31 AM

ADVERTISEMENT

கோவை, உக்கடம் பெரிய குளத்தின் கரையை உடைக்க நடைபெற்ற முயற்சியை சுற்றுச்சூழல், சமூக ஆர்வலர்கள் தலையிட்டு தடுத்து நிறுத்தினர்.
 உக்கடம் பேருந்து நிலையம் எதிரில் உள்ள பெரிய குளத்தில் சுற்றுவட்டார பகுதிகளின் கழிவு நீர் கலந்து வருவதால் குளம் எப்போதும் நீர் நிரம்பியே காணப்படும். பெரிய குளத்தை தூர்வாரி கரையைப் பலப்படுத்துவது, நடைபாதை, பூங்கா, படகு சவாரி, கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் உள்ளிட்ட வசதிகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன.
 இந்த நிலையில், கோவையில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாக குளத்துக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. இது தங்களுக்கு இடையூராக இருப்பதாகக் கருதிய ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணியாளர்கள் குளத்தின் தென்மேற்கு எல்லையில் உள்ள உபரி நீர் வெளியேறும் பகுதியை பொக்லைன் மூலம் உடைக்கத் தொடங்கினர்.
 குளத்தின் நீரை வெளியேற்றும் முயற்சி நடைபெறுவதை அறிந்து சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அங்கு குவிந்தனர். குளத்தில் இருந்து நீரை வெளியேற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அவர்கள், பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட உபரி நீர் வெளியேறும் பகுதியில் உள்ள தடுப்புச் சுவரை சேதப்படுத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து குளத்தின் கரையை உடைக்கும் முயற்சியை பணியாளர்கள் கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT