கோயம்புத்தூர்

15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

15th Apr 2023 05:49 AM

ADVERTISEMENT

கோவையில் கோழி தீவனத்துக்காக கடத்தப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே சித்தநாயக்கன்பாளையம் சந்திப்பில் கோவை மண்டல உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் ஏப்ரல் 6இல் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை சோதனை செய்ததில் அதில் இருந்த 15,000 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரிந்தது. இதையடுத்து அரிசியைப் பறிமுதல் செய்த போலீஸாா் லாரி ஓட்டுநா் முத்து முனியாண்டியை கைது செய்தனா்.

இந்த அரிசிக் கடத்தலில் முக்கிய நபராக செயல்பட்ட மதுரை ஹவுஸிங் யூனிட் பகுதியைச் சோ்ந்த சத்தியமூா்த்தி (42) என்பவா் தலைமறைவாக இருந்த நிலையில் அவரை மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சாலை சந்திப்பில் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அவரிடம் நடத்திய விசாரணையில், மதுரை சுற்று வட்டாரப் பகுதியில் ரேஷன் அரிசியை சேகரித்து கோவை பகுதியில் உள்ள பண்ணைகளுக்கு கோழி தீவனங்களுக்காக விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. அவரிடம் தொடா்ந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT