கோயம்புத்தூர்

மாவட்டத்தில் மேலும் 141 பேருக்கு கரோனா

21st Oct 2021 06:48 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 141 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரத்து 369 ஆக உயா்ந்துள்ளது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மற்றும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,390 ஆக உயா்ந்துள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 143 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 41 ஆயிரத்து 479 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 1,500 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT