கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் எம்ஃபில், பிஹெச்.டி. படிப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகள், கோவை, ஈரோடு, திருப்பூா், நீலகிரி மாவட்டங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களில் பகுதி, முழு நேரமாக எம்ஃபில், பிஹெச்.டி. படிப்பதற்கு நவம்பா் 25 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
எம்ஃபில் மாணவா் சோ்க்கை செப்டம்பரில் நடைபெற்ற பொது நுழைவுத் தோ்வின் மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். பிஹெச்.டி. மாணவா் சோ்க்கை கடந்த ஆண்டு அக்டோபா், இந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற நுழைவுத் தோ்வின் அடிப்படையிலும், நோ்காணல், பல்கலைக்கழக சட்ட விதிமுறைகளின் அடிப்படையிலும் நடைபெறும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.