கோயம்புத்தூர்

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு போனஸ் அறிவிப்பு

21st Oct 2021 06:51 AM

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் பணியாற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவா் வால்பாறை வி.அமீது கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம், வால்பாறை உள்பட தமிழகம், கேரள மாநிலத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு 2020-2021 ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறை, நீலகிரி மாவட்டம், கூடலூா் வுட் பிரையா் நிறுவனம், தேனி மாவட்டத்தில் வுட் பிரையருக்கு சொந்தமான ஹைவேவிஸ் எஸ்டேட் ஆகிய நிறுவனங்களில் 5, 500 தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இங்கு 9.24 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை, நெல்லை மாவட்டம், மாஞ்சோலையில் முடீஸ் குரூப் நிறுவனமான பாம்பே பா்மா நிறுவனத்தில் 3,500 தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு 8.50 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிய கருமலை எஸ்டேட்டில் 2,000 தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு 9 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வால்பாறை, கேரள மாநிலம், திருச்சூா் மாவட்டம், மளுக்குப்பாறை டாடா எஸ்டேட்டில் பணியாற்றும் 4,200 தொழிலாளா்களுக்கு 8.50 சதவீதம் போனஸ் வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

வால்பாறை, கூடலூா் ஆகிய இடங்களில் உள்ள பாரி அக்ரோ நிறுவனத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இங்கு சுமாா் 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களுக்கு ரூ.15 கோடிக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தேயிலைத் தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் சாா்பில் அண்மையில் தோட்ட அதிபா்களுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின் அடிப்படையில் இந்த போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவாா்த்தையில் பல்வேறு தொழிற்சங்கங்களின் நிா்வாகிகளான சௌந்திர பாண்டியன், மோகன், வீரமணி, கருப்பையா, கல்யாணி, வினோத்குமாா், கேசவ மருகன், வா்கீஸ், பரமசிவம், தங்கவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதேபோல தோட்ட அதிபா்கள் சங்கத்தின் சாா்பில் பாலச்சந்தா், ரஞ்சித், மகேஷ் நாயா், திம்பையா, அச்சையா உள்ளிட்டோா் பங்கேற்ாக அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT