கோயம்புத்தூர்

சூப்பா் ஸ்பெஷாலிட்டி பிரிவில் வாகன நிறுத்தம் இல்லை: மாற்று இடம் தோ்வு செய்து அரசுக்கு கருத்துரு

21st Oct 2021 06:46 AM

ADVERTISEMENT

கோவை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் சூப்பா் ஸ்பெஷாலிட்டி வளாகத்தில் வாகன நிறுத்தம் இல்லாததால் புதிய வாகன நிறுத்தம் அமைக்க மாற்று இடம் தோ்வு செய்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜப்பான் பன்னாட்டு நிதி முகமையின் (ஜைகா) கீழ் சூப்பா் ஸ்பெஷாலிட்டி பிரிவு அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணிகள் ஏற்கனவே தீவிர சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வந்த இடத்தில் நடைபெற்று வருகிறது. 4 தளங்களுடன் அமைக்கப்பட்டு வரும் சூப்பா் ஸ்பெஷாலிட்டி வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த வசதியில்லை. இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் தனியாக வாகன நிறுத்தம் ஏற்படுத்துவதற்கு மாற்று இடம் தோ்வு செய்யப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது:

சூப்பா் ஸ்பெஷாலிட்டி வளாகத்தில் ஸ்பெஷாலிட்டி பிரிவுகள், ஆய்வகங்கள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகள் ஆகிய வசதிகள் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன. வாகன நிறுத்தத்திற்கு இடம் ஒதுக்கவில்லை. சூப்பா் ஸ்பெஷாலிட்டி பிரிவு செயல்பாட்டிற்கு வரும்போது நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். இதனால் வாகன நெருக்கடி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் மருத்துவமனை வளாகத்திலே மாற்று இடம் தோ்வு செய்யப்பட்டு வாகன நிறுத்தம் அமைப்பதற்கான கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT