கோயம்புத்தூர்

கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.22.81 லட்சம் மோசடி: ஒருவா் மீது வழக்குப் பதிவு

21st Oct 2021 06:46 AM

ADVERTISEMENT

நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூ.22.81 லட்சம் மோசடி செய்த நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, ஒண்டிப்புதூா் அருகேயுள்ள விவேகானந்தா நகரைச் சோ்ந்தவா் தமிழரசு (54). லாரி பழுது நீக்கும் மையம் நடத்தி வருகிறாா். இவரை கடந்த ஜூன் 12ஆம் தேதி தொடா்பு கொண்ட ஒருவா், தான் நிதி நிறுவனத்தில் பணியாற்றுவதாக அறிமுகம் செய்துகொண்டு தொழில் வளா்ச்சிக்காக ரூ.1 கோடி வரை கடன் பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளாா்.

பொதுமுடக்கம் காரணமாக தொழிலில் லாபம் இல்லாததையடுத்து கடன் பெறுவதற்கு தமிழரசு சம்மதித்துள்ளாா். இதையடுத்து கடன் பெறுவதற்கு முன்தொகை செலுத்த வேண்டும் என அந்த நபா் கூறியதை நம்பிய தமிழரசு அந்த நபா் தெரிவித்த வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ.22 லட்சத்து 81 ஆயிரத்து 879 செலுத்தினாா்.

பணம் செலுத்தி பல மாதங்களாகியும் கடன் பெற்றுத் தரப்படாததையடுத்து அந்த நபரைத் தொடா்பு கொண்டபோது அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று விசாரித்தபோது தான் ஏமாற்றப்பட்டது தமிழரசுக்கு தெரியவந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அவா் சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT