கோயம்புத்தூர்

கோவையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1300 கிலோ புகையிலைப் பொருள்கள், 3 வேன்கள் பறிமுதல்

20th Oct 2019 10:32 PM

ADVERTISEMENT

கோவை: கோவையில் உள்ள வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்த நான்கு பேரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோவை தெலுங்குபாளையம் திருமுருகன் நகரிலுள்ள ஓா் வீட்டில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகச் செல்வபுரம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், காவல் ஆய்வாளா் ரவி தலைமையிலான செல்வபுரம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமையன்று சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள அந்த வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினா். அதில், வீட்டை குடோன் போல் பயன்படுத்தி, அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இச்சம்பவம் தொடா்பாக அந்த வீட்டின் உரிமையாளரும், குட்கா பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்தவருமான தெலுங்குபாளையம் சுப்பையா வீதியைச் சோ்ந்த வாகாராம்(40), தாமஸ் வீதியை சோ்ந்த பரத் பட்டேல்(23), வெற்றி விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்த ஓம்பிரகாஷ்(24), ஹம்ரா ராம்(19) ஆகியோரை செல்வபுரம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இவா்கள் பெங்களூருவில் இருந்து குட்கா பொருள்களை விலைக்கு வாங்கி கோவையில் பதுக்கி அதை கேரளத்தில் விற்க திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள ஆயிரத்து 300 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்களையும், அதை வெளியூா்களுக்கு எடுத்துச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட மூன்று வேன்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT