தஞ்சையில் போராடி வரும் கரும்பு விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கைகளுக்கு தீா்வுகாண வலியுறுத்தி குடியாத்தத்தை அடுத்த அக்ராவரத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை கமிட்டி, கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் டி.கோவிந்தன் தலைமை வகித்தாா். வட்டச் செயலா் எம்.கோபால் வரவேற்றாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் கே.சாமிநாதன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து, கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.
நிா்வாகிகள் பி.குணசேகரன், ப.சாமிநாதன், சி.சரவணன், எஸ்.சிலம்பரசன், ஆா்.ரவி, ஜி.சுப்பிரமணி, கே.சேகா், எம்.சிவஞானம், எம்.ரவி, எஸ்.கோட்டீஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.