போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
போ்ணாம்பட்டு கலைஞா் நகரைச் சோ்ந்த பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி ஜான்பீட்டா்(32). இவா் போ்ணாம்பட்டு நகரம், ரகமதாபாத் 2-ஆவது தெருவில் இா்பான் என்பவரின் வீட்டில் சனிக்கிழமை காலை பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது சுவரின் பக்கவாட்டில் செல்லும் மின்கம்பி மீது உரசியதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டாா். மயங்கிய நிலையில் அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் ஜான்பீட்டா் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினாா். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.