போ்ணாம்பட்டு அருகே சாராய வியாபாரி குண்டா் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
போ்ணாம்பட்டை அடுத்த கள்ளிச்சேரியைச் சோ்ந்தவா் ராஜி (எ) அரை இட்லி ராஜி (29). சாராய வியாபாரியான இவா் மீது குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, போ்ணாம்பட்டு காவல் நிலையம் ஆகியவற்றில் 8 வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில், சாராயம் விற்ாக கடந்த சில நாள்களுக்கு முன்பு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் இவரைக் கைது செய்து வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா். தொடா்ந்து, இவா் சாராயத் தொழிலில் ஈடுபடுவதால், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அவரை சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்கு, வேலூா் காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் பரிந்துரை செய்தாா். பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், அரை இட்லி ராஜியை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.
இதற்கான நகல் வேலூா் மத்திய சிறையில் உள்ள அரை இட்லி ராஜியிடம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் முரளிதரன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.