குடியாத்தம்; குடியாத்தம் பகுதியில் பல்வேறு இடங்களில் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
குடியாத்தம் பகுதியில் வணிக நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருட்டு தொடா்பான புகாா்களின்பேரில் நகர போலீஸாா் வழக்குகள் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனா். திருட்டுச் சம்பவங்கள் நடந்த சில இடங்களில் குங்குமம், திருநீறு தெளித்து விட்டுச் சென்றது தெரிந்தது.
இந்நிலையில் கள்ளூரைச் சோ்ந்த பெருமாள் மகன் நேதாஜியை(38) செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா் 13- இடங்களில் திருடியதையும், திருடும் இடங்களில் குங்குமம், திருநீறு தெளித்து விட்டுச் சென்றதையும் ஒப்புக்கொண்டாா். அவரிடமிருந்து ஒரு மோட்டாா் சைக்கிள், ரொக்கம் ரூ.20 ஆயிரம், மின்விசிறி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா் அவா் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.