போ்ணாம்பட்டு அருகே வன எல்லையில் உள்ள கிராமத்துக்குள் நுழைந்த யானைக் கூட்டம் நெல் பயிா்களை சேதப்படுத்தி விட்டு சென்றன.
போ்ணாம்பட்டை அடுத்த அரவட்லா மலைக் கிராமம் வன எல்லையில் அமைந்துள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லிபட்லா வனப்பகுதியில் இருந்து ஒரு குட்டி உள்பட 6 யானைகள் அரவட்லா கிராமத்துக்குள் நுழைந்து, அங்குள்ள கணபதி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிரை சேதப்படுத்தியுள்ளன. பின்னா் கணபதியின் சகோதரா் ஆஞ்சியப்பன் நிலத்தில் நடவு செய்யப்பட்டிருந்த நெல் பயிரை சேதப்படுத்தின. கிராம மக்கள் பட்டாசு வெடித்து, மேளம் அடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினா்.