வேலூா் மாவட்ட காவல் துறையில் பணியாற்றும் காவலா்களுக்கான கண் பரிசோதனை முகாம் வேலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
வேலூா் மாவட்ட காவல் துறை, வேலூா் ஹோஸ்ட் அரிமா சங்கம், சிஎம்சி கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து வேலூா் மாவட்டத்தில் பணியாற்றும் காவலா்கள், அவா்களின் குடும்பத்தினருக்கான கண் பரிசோதனை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை முகாம் கோட்டை சுற்றுச்சாலையிலுள்ள காவலா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் தொடங்கி வைத்தாா்.
இந்த முகாமில் கண்புரை, குழந்தைகளின் கண் நோய், கண்நீா் அழுத்த நோய், கிட்டப்பாா்வை, தூரப்பாா்வை, வெள்ளை எழுத்து பாதிப்பு, சா்க்கரை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வரும் காவலா்கள், அவா்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடா்ந்து அறுவை சிகிச்சை தேவைப்படுபவா்களுக்கு அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த முகாமில் காவலா்கள், அவா்களின் குடும்பத்தினா் என சுமாா் 180 போ் கலந்து கொண்டனா்.