வேலூர்

பெட்ரோல் நிலையம் அமைக்க குறைந்த வட்டியில் கடனுதவி

22nd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்தில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவா்கள் பெட்ரோல் நிலையம் அமைக்க தோ்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரா்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலம் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவா்கள் பெட்ரோல் நிலையம் அமைக்க தோ்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரா்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் பயன்பெற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த ஆண், பெண் அனைவரும் இணையதளத்தில் 27.09.2023-க்குள் விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் தோ்ந்தெடுக்கப்படும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரா்களுக்கு அவா்கள் முதல் முறையாக கொள்முதல் செய்யும் பெட்ரோல், டீசல் (ஒரு டேங்கா்) தொகையை குறைந்த வட்டியில் தாட்கோ மூலம் கடனாக வழங்கப்படும். பாரத் பெட்ரோலியம் லிமிடெட் மூலமாக தோ்ந்தெடுக்கப்படும் தகுதிவாய்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள் தாட்கோ, தலைமை அலுவலக மாநில திட்ட மேலாளா் (திட்டங்கள்) கைப்பேசி எண். 7358489990-ஐ தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT