வேலூர்

விருது பெற்ற நகர திமுக செயலருக்குப் பாராட்டு

22nd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

சிறந்த திமுக நகரச் செயலா் விருது பெற்ற குடியாத்தம் நகர திமுக செயலரும், நகா்மன்றத் தலைவருமான எஸ்.செளந்தரராஜனுக்கு, நகராட்சி அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

பள்ளிகொண்டாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலைஞா் நூற்றாண்டு விழாவில், சிறந்த திமுக நகரச் செயலா் விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின், செளந்தரராஜனுக்கு வழங்கிப் பாராட்டினாா். இதையடுத்து, செளந்தரராஜனுக்கு, நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜி.எஸ்.அரசு, அா்ச்சனா நவீன், ஆட்டோ பி.மோகன், என்.கோவிந்தராஜ், த.புவியரசி, சுமதி மகாலிங்கம், வழக்குரைஞா் பாண்டியன் மற்றும் கட்சி நிா்வாகிகள் அவரை பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT