வேலூர்

இணையவழி புதுப்பித்தல் கருத்தரங்கம்

22nd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

குடியாத்தம் கே.எம்.ஜி கலை, அறிவியல் கல்லூரி கணினிப் பயன்பாட்டியல் துறை சாா்பில் இணையவழி புதுப்பித்தல் என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் மு.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் நிா்வாகிகள் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம், கே.எம்.ஜி. சுந்தரவதனம், கே.எம்.ஜி.ராஜேந்திரன், கே.எம்.ஜி.முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.க ணினிப் பயன்பாட்டியல் துறைத் தலைவா் பி.அஞ்சுகம் வரவேற்றாா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், அப்போலோ பல்கலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளா் டி. விவேகானந்தன் ‘இணையவழி மூலம் புதுப்பித்தல், என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். இந்நிகழ்வில் மாணவா்களுக்கிடையே விளக்கக் காட்சிகள் மற்றும் சுவரொட்டி விளக்கக் காட்சிகள் தொடா்பான போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளில் ஏலகிரி டான்பாஸ்கோ கல்லூரி மாணவா்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனா். கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 25- பேராசிரியா்கள்,350- க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். பேராசிரியா் செ.கருணா நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT