வேலூர்

மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை வாக்காளா் பெயா் சோ்ப்பு சிறப்பு முகாம்

22nd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் சனிக்கிழமை (செப். 23) நடைபெறுகிறது.

தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அலுவலா் மற்றும் அரசு முதன்மைச் செயலா் ஆகியோா் அறிவுறுத்தலின்படி 1.1.2024 -ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு சிறப்பு சுருக்க திருத்தம் 2024- இன் பணிகளில் ஓா் அங்கமாக, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு முகாம் வேலூா் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் வரும் சனிக்கிழமை செப். 23) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்பட உள்ளது.

வேலூா் மாநகராட்சிக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT