வேலூர்

அரசுக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா

21st Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ஜி.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் எம்.ஏ.ஷமீம் ரிஹானா வரவேற்றாா். ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.

ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து அவா் சிறப்புரையாற்றினாா். ஊட்டச்சத்து படைப்புகள் அடங்கிய கண்காட்சியை அவா் திறந்து வைத்து, பாா்வையிட்டாா்.

தேசிய ஊட்டச் சத்து மாத விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

விழாவில் பேராசிரியா்கள் வி.கே.சிவகுமாா், எஸ்.கருணாநிதி, நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் என்.கஜலட்சுமி, பி.சக்கரவா்த்தி, எம்.மலா்விழி, பி.புவியரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT