வேலூா், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூா் மாவட்டங்களில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்.22) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா்கள் பெ.குமாரவேல் பாண்டியன், ச.வளா்மதி, தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக அவா்கள் வெளியியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம், மின்சார வாரியம், வனத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று, விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகள் குறித்து பதிலளிக்க உள்ளனா்.
கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
எனவே, இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று களப் பிரச்னைகளை நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவித்து பயன் பெறலாம்.