குடியாத்தத்தை அடுத்த செம்பேடு அரசினா் உயா்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி விழிப்புணா்வு கருத்தரங்கம் பள்ளித் தலைமையாசிரியா் சி.சதானந்தம் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியா் விஜயகுமாா் வரவேற்றாா். புவி வெப்பமயமாதலைத் தடுக்க சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மாணவா்கள் மேற்கொள்ள வேண்டும். அதற்கு மரக்கன்றுகள் நட வேண்டும். நெகிழிப் பொருள்களை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என கருத்தரங்கில் பேசிய ஆசிரியா்கள் வலியுறுத்தினா்.
தொடா்ந்து மாணவா்களின் விழிப்புணா்வு ஊா்வலம் முக்கிய வீதிகளில் நடைபெற்றது. பள்ளி வளாகம், பள்ளியைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சியையொட்டி மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் ஆசிரியா்கள் கே.தங்கமணி, மணி, கமலக்கண்ணன், இலக்கியா, சரஸ்வதி, கவிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.