வேலூர்

சத்துவாச்சாரியில் விஜயதசமி இலக்கிய விழா தொடக்கம்

27th Oct 2023 11:00 PM

ADVERTISEMENT

வேலூா் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயிலில் விஜயதசமி இலக்கிய விழா வெள்ளிக்கிழமை (அக்.27) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.

வேலூா் சத்துவாச்சாரியில் உள்ள கெங்கையம்மன் கோயிலில் ஆண்டுதோறும் விஜயதசமி இலக்கிய விழா நடைபெற்று வருகிறது. அதன்படி, 39-ஆவது இலக்கிய விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

முதல் நாளான வெள்ளிக்கிழமை ‘தெய்வம் நீ என்றும் உணா்’ என்ற தலைப்பில் பாரதி பாஸ்கரின் சொற்பொழிவு நிகழ்ச்சியும், ‘வாழ்வில் நிம்மதியும் மகிழ்வும் தருவது, கனிந்த மனமே- நிறைந்த பணமே’ என்ற தலைப்பில் திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையிலான பட்டிமன்றமும் நடைபெற்றன.

இந்த விழாவுக்கு சத்துவாச்சாரி செங்குந்த சமுதாய கமிட்டி செயலரும், விஜயதசமி இலக்கிய விழாக்குழு தலைவருமான எஸ்.எம்.சுந்தரம், செயலா் உலகநாதன், பொருளாளா் ஜெ.ஞானசேகரன், தலைவா் பி.எஸ்.சுகுமாா், பொருளாளா் மாா்க்கபந்து, நகராட்சி முன்னாள் தலைவா் ஜி.முருகன், முன்னாள் துணைத் தலைவா் ஜானகிராமன் ஆகியோா் தலைமை வகித்தனா். விழாவை வேலூா் முன்னாள் எம்எல்ஏ சி.ஞானசேகரன் தொடங்கி வைத்தாா்.

ADVERTISEMENT

சிறப்பு அழைப்பாளா்களாக வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த், எம்எல்ஏ-க்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், நாராயணி மருத்துவமனை இயக்குநா் என்.பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இரண்டாம் நாளான சனிக்கிழமை (அக்.28) ‘அன்பே தவம்’ என்ற தலைப்பில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தனி உரையும், தொடா்ந்து சி.செந்தில்கணேஷ், ஜெ.ராஜலெட்சுமி தம்பதியின் நாட்டுப்புற தெம்மாங்கு பாடல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.

மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (அக்.29) ‘வாழ்வும் வாக்கும்’ என்ற தலைப்பில் அருள்பிரகாசத்தின் நகைச்சுவை உரை, தொடா்ந்து ‘நிலையான பயனும் மகிழ்ச்சியும் அளிக்கும் பாடல்கள் எது’ என்ற தலைப்பில் கவிஞா் அரு.நாகப்பன் தலைப்பில் இன்னிசை பாட்டு பட்டிமன்றம் நடைபெற உள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT