குடியாத்தம் நகா்மன்றத் தலைவரும், நகர திமுக செயலருமான எஸ்.செளந்தரராஜன் குறித்து அவதூறு பரப்பும் நபா் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக நிா்வாகிகள் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.
இது தொடா்பாக குடியாத்தம் நகர திமுக அவைத் தலைவா் க.கோ.நெடுஞ்செழியன், நகரக் காவல் ஆய்வாளா் பாா்த்தசாரதியிடம் அளித்த புகாா் மனு:
குடியாத்தம் நகரைச் சோ்ந்த முரளி, நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் குறித்து அவதூறு பரப்பி வருகிறாா். அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா். புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளா் பாா்த்தசாரதி உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா். நகர திமுக நிா்வாகிகள் என்.ஜம்புலிங்கம், ம.மனோஜ், வசந்தா ஆறுமுகம், த.பாரி, பெ.கோட்டீஸ்வரன், கே.தண்டபாணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.