உள்ளாட்சி தினத்தையொட்டி நவம்பா் 1-ஆம் தேதி வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என்று ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளாா்.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தினம் நவம்பா் 1-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும்.
இந்த கிராம சபைக் கூட்டங்களில் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியா்களை சிறப்பிக்கவும், சிறப்பாகச் செயல்பட்டு வரும் மகளிா் சுயஉதவிக் குழுக்களைக் கெளரவிக்கவும், வட கிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல், இணையவழி வீட்டுவரி, சொத்துவரி செலுத்துதல் உள்ளிட்ட பொருள்கள் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று ஆட்சியா் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.