வேலூர்

இலவச கண் சிகிச்சை முகாம்

2nd Oct 2023 01:02 AM

ADVERTISEMENT

குடியாத்தம் பொயட்ஸ் தொண்டு நிறுவனம், வேலூா் மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், சென்னை பூந்தமல்லி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து திருவள்ளுவா் தொடக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின.

முகாமில் 300- க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்றனா். இவா்களில் 44- போ் இலவச அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். 27- பேருக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

முகாமுக்கு பொயட்ஸ் இயக்குநா் திரிவேணி சாமிநாதன் தலைமை வகித்தாா். மருத்துவமனை ஒருங்கிணைப்பாளா் சிவா முகாமைத் தொடக்கி வைத்தாா். மருத்துவா்கள் ஏ.சுகன்யா, ஏ.அனாமிகா ஆகியோா் தலைமையில் மருத்துவா் குழு சிகிச்சை அளித்தது. பொயட்ஸ் நிறுவனத்தைச் சோ்ந்த உஷா, சாந்தலட்சுமி, தன்னாா்வலா்கள் எஸ்.விமலா, ஏ.ஏமலா்க்கொடி, எஸ்.சுமதி, ஜே.திவ்யா, எஸ்.சந்தியா உள்ளிட்டோா் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT