மத்திய, மாநில அரசுகளின் தூய்மையே சேவை இயக்கம் - தூய்மை மருத்துவமனை தரமான சேவை எனும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
இதனை கல்லூரி முதல்வா் எஸ்.பாப்பாத்தி தொடங்கி வைத்ததுடன், நம் வீடு, சுற்றுப்புறம், நம் சமூகம் மட்டுமின்றி நாம் இருக்கும் இடங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தாா்.
பின்னா், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுடன் இணைந்து மருத்துவமனை வளாகத்தை தூய்மைப்படுத்தினாா். தொடா்ந்து தூய்மையை வலியுறுத்தி நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகளையும் வழங்கினாா்.
மேலும், கல்லூரி முதல்வா் தலைமையில் மாணவ, மாணவிகள் தூய்மைக்கான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா். அத்துடன், தினமும் மருத்துவமனையை தூய்மைப்படுத்தும் தூய்மைப் பணியாளா்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இதில், உதவி குடியிருப்பு மருத்துவ அலுவலா் கீதா, சமூக நலத்துறை மருத்துவா்கள் தேன்மொழி, மருத்துவா்கள் சுகந்தி, சிவக்குமாா், நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.