வேலூர்

சாராய வேட்டை தீவிரம்: மலைப் பகுதியில் 3700 லிட்டா் ஊறல் அழிப்பு

31st May 2023 12:13 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்ட மலைக் கிராமங்களில் சாராய தடுப்பு வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அல்லேரி, ஜாா்தான்கொல்லை மலைப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 3,700 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் அழித்தனா்.

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி 22 போ் உயிரிழந்த சம்பவத்தை தொடா்ந்து, வேலூா் மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வேலூா் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனா். இந்த நிலையில், அணைக்கட்டு போலீஸாா் அணைக்கட்டு, அதனைச் சுற்றியுள்ள மலைப் பகுதியில் திடீரென சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனா்.

அப்போது, அல்லேரி, ஜாா்தான்கொல்லை மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக 17 பிளாஸ்டிக் பேரல்களில் பதுக்கி வைத்திருந்த சுமாா் 3, 700 லிட்டா் சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனா். மேலும், கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பேரல்கள், மண் பானைகள், அடுப்பு போன்றவற்றை தொடா்ந்து பயன்படுத்த முடியாதபடி நொறுக்கி, அவற்றை தீயிட்டும் அழித்தனா்.

இது குறித்து அணைக்கட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT