வேலூர்

திமுக செயற்குழுக் கூட்டம்

31st May 2023 12:11 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் கட்சியின் மாவட்ட அவைத்தலைவா் முகமதுசகி தலைமையில் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்டச் செயலரும், அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமாா் சிறப்புரையாற்றினாா். எம்எல்ஏ-க்கள் ப.காா்த்திகேயன், அமலுவிஜயன், மேயா் சுஜாதாஆனந்தகுமாா், துணை மேயா் எம்.சுனில்குமாா், மாவட்டப் பொருளாளா் நரசிம்மன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்தநாளை ஜூன் 3-ஆம் தேதி வேலூா் மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும், வேலூா் மாவட்டத்தில் நிா்ணயிக்கப்பட்ட இலக்கை கடந்து உறுப்பினா் சோ்க்கை மேற்கொள்ள நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் மு.பாபு, மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள், கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT