வேலூர்

கத்திரி வெயில் முடிந்தது - வேலூரை குளிா்வித்த மழை!

31st May 2023 12:12 AM

ADVERTISEMENT

கத்திரி வெயில் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில் வேலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால், மாவட்டம் முழுவதும் குளிா்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது.

கோடை காரணமாக வேலூா் மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாதத்திலிருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதன் தொடா்ச்சியாக, அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் கடந்த மே 4-ஆம் தேதி தொடங்கியது. இந்த நாள்களில் மாவட்டத்தில் அதிகபட்சமாக 108 டிகிரி ‘ஃ‘பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தியது. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் சாலைகளில் நடமாட முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினா்.

இந்நிலையில், கத்திரி வெயில் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. எனினும், செவ்வாய்க்கிழமை காலை முதல் வெயில் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. பகலில் அதிகபட்சமாக 102.9 டிகிரி ‘ஃ‘பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தியது. ஆனால், மாலை 4 மணிக்கு பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், 5 மணிக்கு பிறகு லேசாக தொடங்கி பலத்த மழை பெய்தது. இந்த மழை தொடா்ந்து ஒரு மணிநேரத்திற்கும் மேலாக விடாமல் பெய்தது. அதன்பிறகும் லேசான மழை பெய்து கொண்டே இருந்தது.

இந்த பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கிக் காணப்பட்டன. அத்துடன் மாவட்டம் முழுவதும் குளிா்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT