வேலூர்

கல்குவாரி குட்டையில் மூழ்கி முதியவா் பலி

31st May 2023 12:12 AM

ADVERTISEMENT

பென்னாத்தூா் அருகே கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், பென்னாத்தூா் அடுத்த கணேசபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அபிமன்னன் (70) விவசாயி. இவா் அந்த கிராமத்தில் செயல்படாமல் இருந்த கல்குவாரி குட்டைக்கு திங்கள்கிழமை தனது மனைவி புஷ்பாவுடன் சென்றாா். புஷ்பா துணிகளை துவைத்துக் கொண்டிருந்தாா். அப்போது அபிமன்னன் குளிப்பதற்காக கல்குவாரியில் இறங்கிய போது, ஆழமான பகுதியில் தத்தளித்தபடி நீரில் மூழ்கினாராம்.

தகவலறிந்து வந்த வேலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் திங்கள்கிழமை இரவு வரை தேடினா். ஆனால் சடலம் கிடைக்கவில்லை. இதையடுத்து, அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், 18 போ் கொண்ட மீட்புக் குழுவினா் வந்து செவ்வாய்க்கிழமை அபிமன்னனின் சடலத்தை மீட்டனா்.

அரியூா் போலீஸாா் அபிமன்னனின் சடலத்தை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT