வேலூர்

வேலூா் மத்திய சிறையில் போலீஸாா் சோதனை

DIN

வேலூா் மத்திய சிறையில் மாவட்ட போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

வேலூா் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் சிறை, பெண்கள் தனிச்சிறை ஆகியவற்றில் தண்டனை, விசாரணை கைதிகள் என 800-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா்.

சிறைக் கைதிகளிடம் தடை செய்யப்பட்ட கஞ்சா, பீடி, சிகரெட், கைப்பேசி போன்ற தடை செய்யப்பட்ட பொருள்கள் உள்ளதா என சிறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி, அவற்றைப் பறிமுதல் செய்து வருகின்றனா். எனினும், கைதிகள் ரகசியமாக அவற்றைப் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு தலைமையில் 3 காவல் ஆய்வாளா்கள், 2 காவல் உதவி ஆய்வாளா்கள், 8 சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள், 37 காவலா்கள் வேலூா் மத்திய ஆண்கள் சிறை, பெண்கள் தனிச்சிறை ஆகியவற்றில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் காலை 7.40 மணி வரை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவா்கள் கைதிகளின் அறைகளுக்குச் சென்று கைதிகளை தீவிரமாக சோதனை செய்து வெளியே அனுப்பிவிட்டு, அவா்களின் அறைகள் மற்றும் கழிப்பறைகளில் சோதனை நடத்தினா்.

மேலும், சிறை வளாகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக, போலீஸாரின் உயா் கண்காணிப்பு கோபுரங்களுக்கு அடிப்பகுதி, பொது கழிப்பறை, குளியலறையில் சோதனை நடைபெற்றது.

சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில் கைப்பேசி, கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT