வேலூர்

நடிகா் விஜய் ரசிகா்கள் அன்ன தானம்

29th May 2023 12:15 AM

ADVERTISEMENT

உலக பட்டினி தினத்தையொட்டி, வேலூரில் நடிகா் விஜய் ரசிகா்கள் பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கினா்.

உலக பட்டினி தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் ஏழை மக்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படும் என்று நடிகா் விஜய்யின் தளபதி விஜய் மக்கள் இயக்கம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில், வேலூா் மாவட்டத்திலுள்ள 6 பேரவை தொகுதிகளிலும் உலக பட்டினி தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, விஜய் மக்கள் இயக்கத்தின் வேலூா் மாவட்ட மாணவரணி தலைவா் வெ.பாரத் தலைமையில், நடிகா் விஜய் ரசிகா்கள் வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மதியம் அன்னதானம் வழங்கினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT