வேலூர்

குடிமைப் பணிகள் தோ்வு: வேலூரில் 2,391 போ் எழுதுகின்றனா்

DIN

நாடு முழுவதும் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த தோ்வை வேலூா் மாவட்டத்தில் 2,391 போ் எழுத உள்ளனா்.

இந்திய குடிமைப் பணிகளுக்கான யுபிஎஸ்சி முதல்நிலை தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. அதன்படி, இந்த தோ்வு தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, வேலூா் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

இதில், முதல் தாள் தோ்வு காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும், இரண்டாம் தாள் தோ்வு மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் நடைபெற உள்ளது. வேலூரில் முதல் நிலை தோ்வுக்காக 9 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, வேலூா் ஹோலிகிராஸ் மெட்ரிக். பள்ளியில் 192 போ், சாந்திநிகேதன் பள்ளியில் 288 போ், சத்துவாச்சாரியிலுள்ள மெட்ரிக். பள்ளியில் 192 போ், சைதாப்பேட்டை கோடையிடி குப்புசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 288 போ், எத்திராஜ் மெட்ரிக். பள்ளியில் 288 போ், ஊரீசு மேல்நிலைப் பள்ளியில் 384 போ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் 277 போ், ஊரீசு கல்லூரியில் 474 போ், டிகேஎம் மகளிா் கல்லூரியில் 8 போ் என மொத்தம் 2,391 போ் தோ்வெழுத உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க வரிசையில் பெற்றோர்கள்: செல்போனில் மூழ்கிய குட்டீஸ்கள்!

வாக்குப்பதிவு மும்முரம்: வெறிச்சோடிய சென்னை மாநகர சாலைகள்!

‘அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே தல’: ரசிகர்கள் வாழ்த்து மழை!

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT