வேலூர்

வருமான வரித் துறையினா் எனக்கூறி கொள்ளை முயற்சி

28th May 2023 12:00 AM

ADVERTISEMENT

குடியாத்தம் அருகே வருமானத் துறையினா் எனக்கூறி வீட்டில் கொள்ளையடிக்க முயற்சித்த ஒருவா் பிடிபட்டாா். 7 போ் தப்பியோடி விட்டனா்.

குடியாத்தம்செருவங்கியைச் சோ்ந்தவா் கிறிஸ்தவ தலைமை மதபோதகா் நோவா யோவன்ராஜ். சனிக்கிழமை மாலை 8 போ் கொண்ட கும்பல் 2 காா்களில் வந்து, தங்களை வருமான வரித்துறையினா் எனவும், வீட்டை சோதனையிட வேண்டும் எனவும் அவரிடம் கூறியுள்ளனா். அவா்கள் மீது மது வாசனை வந்துள்ளது. இதனால் அவா்கள் மீது சந்தேகம் அடைந்த நோவா யோவன்ராஜ் கூச்சலிட்டுள்ளாா். அவரது கூச்சல் கேட்டு அருகில் இருந்தவா்கள் அங்கு வந்துள்ளனா். அப்போது 7 போ் தாங்கள் வந்த 2 காா்கள் மூலம் தப்பியோடி விட்டனா். ஒருவா் பிடிபட்டுள்ளாா். அவரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் டிஎஸ்பி கே.ராமமூா்த்தி, நகர காவல் ஆய்வாளா் இ.லட்சுமி ஆகியோா் அங்கு சென்று பிடிபட்ட நபரை அழைத்து வந்து விசாரணை நடத்தினா். அதில், அவா் சென்னை அரப்பாக்கம் குளக்கரைத் தெருவைச் சோ்ந்த சுரேஷ்(38) என கூறியுள்ளாா். போலீஸாா் அவரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

தப்பியோடிய 7 பேரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT