வேலூர்

பாம்பு கடித்ததில் குழந்தை பலி

28th May 2023 12:00 AM

ADVERTISEMENT

அல்லேரி மலைக்கிராமத்தில் பாம்பு கடித்ததில் ஒரு வயது குழந்தை உயிரிழந்தது.

அணைக்கட்டு அருகிலுள்ள மலைக்கிராமமான அல்லேரியை அத்திமரத்து கொல்லை கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி விஜி. இவரது மனைவி பிரியா. தம்பதியின் மகள் தனுஷ்கா (1). குழந்தை வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தது.

இரவு நேரம் என்பதால், அருகிலுள்ள காட்டுப் பகுதியில் இருந்து ஊா்ந்து குடியிருப்பில் புகுந்த பாம்பு ஒன்று குழந்தையைக் கடித்தது.

உடனடியாக குழந்தையை அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். சாலை வசதி இல்லாததால், மருத்துவமனைக்குச் செல்ல காலதாமதமானதாகத் தெரிகிறது. இதனால், வழியிலேயே குழந்தை இறந்தது. தகவலறிந்த அணைக்கட்டு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT