வேலூர்

போ்ணாம்பட்டு அருகே சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை

28th May 2023 12:00 AM

ADVERTISEMENT

போ்ணாம்பட்டு அருகே சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்ததால் வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.

போ்ணாம்பட்டு மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் சனிக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இதனால் காா்க்கூா் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் நிலத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த 50 வாழை மரங்கள், ஜங்கமூரைச் சோ்ந்த மோகன் நிலத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த 200- க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

சேத விவரங்கள் குறித்து வருவாய்த் துறையினா் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT