குடியாத்தம் அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் நிலத்தில் இருந்த தென்னை, பனை மரங்கள் எரிந்து சேதமடைந்தன.
குடியாத்தத்தை அடுத்த காா்த்திகேயபுரம் அருகே பீமன்பட்டி பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் திங்கள்கிழமை மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் நிலத்தில் இருந்த தென்னை, பனை மரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தகவலின் பேரில் தீயணைப்புப் படையினா் அங்கு சென்று தீயை அணைத்தனா். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.