வேலூா் மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் கள்ளச் சாராயம், மது விற்ாக 12 போ் கைது செய்யப்பட்டனா்.
வேலூா் மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தை ஒழிக்க மது விலக்கு போலீஸாா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். அதன்படி, வேலூா் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், குடியாத்தம் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளா் முரளிதரன் தலைமையில் போலீஸாா், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினா்.
அப்போது, மாவட்டத்தில் கள்ளச் சாராயம், அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்தது தொடா்பாக மொத்தம் 23 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
இவா்களில் 12 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 645 லிட்டா் கள்ளச் சாராயம், 2,200 லிட்டா் ஊறல் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து அழித்தனா். இதேபோல், 36 மதுப் புட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.