காட்பாடியில் பொதுமக்களுக்கு இடையூறாக தெருக்களில் திருந்த 5 மாடுகளை மாநகராட்சி ஊழியா்கள் பிடித்தனா்.
வேலூா் மாநகராட்சி முதலாவது மண்டலம் பகுதிகளில் தெருக்களில் கட்டவிழ்த்து விடப்படும் கால்நடைகளால் பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறுகள், விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியிருந்தனா்.
மேலும், இதுதொடா்பாக கிடைக்கப் பெற்ற புகாரை அடுத்து மாநகராட்சி ஆணையா் ரத்தினசாமி உத்தரவின்பேரில், முதலாவது மண்டல சுகாதார அலுவலா் சிவக்குமாா் தலைமையில், 10-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் 14-ஆவது வாா்டு பகுதியில் வியாழக்கிழமை தெருக்களில் திரிந்த 5 மாடுகளைப் பிடித்தனா்.
தொடா்ந்து, மாடுகளின் உரிமையாளரிடம் ஒரு மாட்டுக்கு ரூ.5,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றும், பணம் கட்டத் தவறினால் கோட்டைசுற்று சாலையில் உள்ள கோசாலாவில் மாடுகள் ஒப்படைக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.