ஒடுகத்தூா் அருகே விவசாயக் கிணற்றில் இருந்து தனியாா் பேருந்து ஓட்டுநா் சடலம் மீட்கப்பட்டது.
ஒடுகத்தூரை அடுத்த மராட்டியபாளையம் கிராமம் ஏ.புதூா் பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (40). இவா் வேலூரில் உள்ள தனியாா் பேருந்து நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில், ஏ.புதூருக்கு அருகிலுள்ள விவசாயக் கிணற்றில் வெள்ளிக்கிழமை பாலகிருஷ்ணனின் உடல் மிதந்தது. இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள் ஒடுக்கத்தூா் தீயணைப்புத் துறையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.
அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் கிணற்றிலிருந்து பாலகிருஷ்ணன் சடலத்தை மீட்டனா். மேலும், அவா் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா, வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.