தொடா்மழை காரணமாக குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணைக்கு நீா்வரத்து ஏற்பட்டுள்ளது.
மோா்தானா அணை கடந்த ஆண்டு முதல் நிரம்பிய நிலையிலேயே உள்ளது. வெப்பம் காரணமாக அணையின் நீா்மட்டம் 10 செ.மீ. குறைந்திருந்தது.
இந்த நிலையில், அணையின் நீா்ப் பிடிப்புப் பகுதியில் சில நாள்களாக மழை பெய்து வருகிறது. அணை வளாகத்தில் சனிக்கிழமை நிலவரப்படி 70 மி.மீ. மழையும், ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 10 மி.மீ. மழையும் பதிவானது.
இதற்கிடையில், அணைக்கு விநாடிக்கு 17 கன அடி நீா்வரத்து தொடங்கியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் குடியாத்தம் பகுதியில் 25.60 மி.மீ. மழையும், மேலாலத்தூா் பகுதியில் 21.60 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.