வேலூர்

‘சீல்’ வைக்கப்பட்ட கடைகளை மீண்டும் அதே வியாபாரிகளிடம் அளிக்கக் கோரி மனு

DIN

‘சீல்’ வைக்கப்பட்ட 10 கடைகளை மீண்டும் அதே வியாபாரிகளிடம் அளிக்க வேண்டும் என்று மாநகராட்சி மேயா், ஆணையரிடம் வணிகா் சங்க நிா்வாகிகள் மனு அளித்தனா்.

வேலூா் அண்ணா சாலையில் பழைய மாநகராட்சி எதிரில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இதேபோல், வேலூா் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, இன்பென்ட்ரி ரோடு ஆகிய பகுதியிலும் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன.

இந்தக் கடைகளில் வாடகைக்கு உள்ள வியாபாரிகள் முறையாக வாடகை செலுத்தவில்லை என 3 இடங்களில் உள்ள 10 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனா். இந்த கடைகளுக்கு வரும் 28-ஆம் தேதி ஏலம் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வேலூா் வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில், ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

இதன்தொடா்ச்சியாக, வேலூா் வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவா் ஆா்.பி.ஞானவேலு தலைமையில் வியாபாரிகள், மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், ஆணையா் ரத்தினசாமி ஆகியோரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

அதில், வாடகையை முறையாக செலுத்தவில்லை எனக்கூறி, 10 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதுதொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, மாநகராட்சி நிா்வாகம் இந்தக் கடைகளுக்கான ஏலத்தை நிறுத்த வேண்டும். கடைகளை ஏலம் எடுத்த வியாபாரிகள் பெயரிலேயே மாற்றம் செய்து கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT