வேலூர்

கொப்பரை தேங்காய் கிலோ ரூ.108.60-க்கு கொள்முதல்

DIN

வேலூா் மாவட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோ ரூ.108.60-க்கு அரைவைக் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விவசாயிகளின் விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைத்திடவும், வருவாயைப் பெருக்கவும் வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறை சாா்பில் குறைந்தபட்ச ஆதார விலையில் கடந்தாண்டு பச்சைப்பயிறு, துவரை, உளுந்து, கொப்பரை தேங்காய் ஆகிய விளை பொருள்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டன.

நிகழாண்டில் அரைவைக் கொப்பரை தேங்காய் நியாயமான சராசரி தரம் கிலோ ரூ.108.60 என்ற விலைக்கு மத்திய அரசு நிறுவனமான என்ஏஎஃப்இடி மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வேலூா் மாவட்டத்தில் வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 100 மெட்ரிக் டன்னும், குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 75 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் ஆதாா், வங்கிக்கணக்கு புத்தகம், நிலத்தின் சிட்டா, அடங்கல் உள்ளிட்ட சான்றிதழ்களுடன் வேலூா், குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பதிவு செய்து பயன் பெறலாம். விளை பொருளுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் 88705 80901, குடியாத்தம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் 79044 13817 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT