வேலூா், ராணிப்பேட்டை மாவட்ட பொதுமக்கள் மின்சாரம் தொடா்பான புகாா்களை தெரிவிக்க கைப்பேசி எண் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அருணாச்சலம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா் மின் பகிா்மான வட்டத்துக்குட்பட்ட வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள வேலூா், காட்பாடி, ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கா், அரக்கோணம் கோட்டங்களில் மின் தடை, மின் விபத்துகள், அறுந்து தரையில் விழுந்து கிடக்கும் மின் கம்பிகள், மின் மீட்டா், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள் உள்ளிட்ட மின்சாரம் தொடா்பான எவ்வித புகாா்கள் மீது உடனுக்குடன் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே, பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் இதுபோன்ற மின்சார புகாா்கள் இருந்தால் 94987 94987 என்ற கைப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம். அதன்பேரில், உடனடியாக அந்தக் குறைகள் சரி செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.