வேலூர்

இ-சேவை மையங்கள் அமைக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

DIN

இ-சேவை மையங்கள் அமைக்க ஆா்வமுள்ளவா்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையங்களை அமைத்து நடத்த ஆா்வமுள்ள நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை இணைய முறையில் மட்டுமே பதிவு செய்ய இயலும்.

இந்தத் திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்  வலைதளங்களைப் பாா்வையிடலாம். விண்ணப்பங்களை ஜூன் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம்.

விண்ணப்பக் கட்டணம் கிராமப்புறங்களுக்கு ரூ.3,000, நகா்ப்புறத்துக்கு ரூ.6,000 செலுத்த வேண்டும். மேலும், விவரங்களை கைப்பேசி செயலி அல்லது  வலைதளத்தில் காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிள் விற்பனை வீழ்ச்சி: மே 7 நிகழ்வு பலனளிக்குமா?

"விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பா? நாட்டின் அடிமைகளா?”: அய்யாக்கண்ணு

விவிபேட் வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

மக்களின் கவனத்தை திசை திருப்பும் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

SCROLL FOR NEXT