வேலூர்

கிளைச் சிறையில் தூய்மையாளா், சமையலா் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

10th Jun 2023 11:24 PM

ADVERTISEMENT

வேலூா் மத்திய சிறையின் கட்டுப்பாட்டிலுள்ள கிளைச் சிறையில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளா், சமையலா் பணியிடங்களுக்கு தகுதியுடையவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடா்பாக வேலூா் மத்திய சிறை கண்காணிப்பாளா் அப்துல் ரகுமான் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா் மத்திய சிறையின் கட்டுப்பாட்டிலுள்ள கிளைச் சிறையில் காலியாக உள்ள 3 தூய்மைப் பணியாளா் பணியிடம், சமையலா் பணியிடம் ஆகியவற்றுக்கு தகுதியுடையோா் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இதில், தூய்மைப் பணியாளா் பதவிக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்கவும், சமையலா் பணிக்கு 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்கவும், இரு ஆண்டுகள் முன் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 37, இதர வகுப்பினருக்கு 34 ஆகும்.

ADVERTISEMENT

தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள், முன்னுரிமைக்கான சான்றிதழ், உரிய கல்வி இதர சான்றிதழ்களுடன் ரூ.30-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய உறை ஒன்றை இணைத்து சிறைக் கண்காணிப்பாளா், மத்திய சிறை, வேலூா்- 02 என்ற முகவரிக்கு வரும் 15-ஆம் தேதிக்குள் தபாலில் அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT