வேலூர்

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பசு மாடு பலத்த காயம்

10th Jun 2023 11:24 PM

ADVERTISEMENT

போ்ணாம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட மாங்கொட்டையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாடு பலத்த காயமடைந்தது.

இதுதொடா்பாக வனத் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

போ்ணாம்பட்டை அடுத்த ஏரிகுத்தி கிராமத்தைச் சோ்ந்த குமரேசன் மனைவி முருகம்மாள். இவா், பசு மாடுகளை வளா்த்து வருகிறாா். அந்த மாடுகள் மேய்ச்சலுக்காக பொகளூா் வனப்பகுதிக்குச் சென்று வருவது வழக்கம். சனிக்கிழமை மேய்ச்சலுக்குச் சென்ற பசு ஒன்று திரும்பி வராததால், அதைத் தேடி வனப்பகுதிக்குச் சென்று தேடியுள்ளாா்.

வனப் பகுதியில் தாடை கிழிந்த நிலையில் பசு மாடு ரத்த காயத்துடன் இருந்தது தெரிய வந்தது. காட்டுப் பன்றி, மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாட மா்ம நபா்கள் மாங்கொட்டையில் நாட்டு வெடியை வைத்திருந்ததை அறியாமல் பசு அந்த கொட்டையைக் கடித்ததால், அது வெடித்து தாடை கிழிந்தது தெரிய வந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து தகவல் அறிந்த வனத் துறையினா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். வனப் பகுதியில் விலங்குகளை வேட்டையாட மாங்கொட்டையில் நாட்டு வெடியை வைத்தது யாா் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT