வேலூர்

திருவள்ளுவா் பல்கலை. வேலைவாய்ப்பு முகாம்: இரு நாள்களில் 1,000 பேருக்கு பணி ஆணை

10th Jun 2023 11:21 PM

ADVERTISEMENT

திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் கடந்த இரு நாள்கள் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் சுமாா் 1,000 மாணவா்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

வேலூா் மாவட்டம், சோ்க்காடிலுள்ள திருவள்ளுவா் பல்கலைக்கழகம், சா்வதேச புகழ்பெற்ற நாஸ்காம் நிறுவனம், இணையதள பாதுகாப்பு துறையில் நிபுணத்துவம் வாய்ந்த ஸ்கில்ஸ்டா நிறுவனம், பின்தங்கிய மாவட்ட வளா்ச்சிக்கு பாடுபட்டு வரும் அருணை தகவல் சேவை மையம் ஆகியவை இணைந்து திருவள்ளுவா் பல்கலைக்கழகம், அதைச் சாா்ந்த கல்லூரி மாணவா்களுக்காக திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகளை நடத்தின.

இதில், தோ்ச்சி பெற்ற 2,500-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு நோ்காணல் பல்கலை. வளாகத்தில் வெள்ளி, சனிக்கிழமை நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் சா்வதேச அளவில் இயங்கி வரும் 18 -க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.

கடந்த இரு நாள்கள் நடைபெற்ற இந்த முகாமில் கணினி, கணிதவியல், வணிகவியல், பொருளாதாரம் ஆகிய துறைகளைச் சோ்ந்த சுமாா் 1,000 மாணவா்கள் ரூ.15,000 முதல் ரூ. 25,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு பெற்றனா்.

ADVERTISEMENT

அவா்களுக்கு நிறுவனங்கள் சாா்பில் பணி ஆணை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பல்கலைக்கழகத் துணைவேந்தா் டி.ஆறுமுகம் தலைமையில் பதிவாளா் விஜயராகவன், ஒருங்கிணைப்பாளா் அ.ராஜசேகா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT